தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்குட்பட்ட கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கடதார அள்ளி பொதுமக்கள் உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வெங்கடதாரா அள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜிவ் காந்தி என்பவர் வெங்கடதாரா அள்ளி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதே ஊரைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
இவர்கள் இருவரும் தேர்தல் பரப்புரைக்கு புதூர் பகுதிக்கு செல்லும்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தேர்தல் பரப்புரை செய்ய அனுமதிக்காத காரணத்தால் இன்று வெங்கட்ட தாராவி பகுதியை சேர்ந்தவர்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். புதூர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவர் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுகிறார். அதே ஊரைச் சேர்ந்த சஞ்சீவ் என்பவரும் வெங்கடதார அள்ளி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.