தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை: தருமபுரி ஆட்சியர் மலர்விழிக்கு குடியரசு துணைத் தலைவர் விருது! - venkaiah naidu gives award

தருமபுரி: மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த முறையில் சேவையாற்றியதற்கான விருதை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழிக்கு இன்று வழங்கினார்.

malarvizhi ias
malarvizhi ias

By

Published : Dec 3, 2019, 3:27 PM IST

2019ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்த மாவட்டமாக தருமபுரி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, தருமபுரி மாவட்டத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று டெல்லியில் நடைபெற்ற அரசு விழாவில் இந்த விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழிக்கு வழங்கினார்.

விருது வழங்கும் வெங்கையா நாயுடு

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால் பொருத்த நடவடிக்கை, மூன்று சக்கர வாகனங்கள் வழங்கல், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மூலம் வழங்கப்படும் நிதி உதவி போன்ற கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்தல் போன்றவற்றை சிறப்பாக செயல்படுத்தியதாக மலர்விழிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மாற்றுத்திறனாளி மனைவி கண்ணீர்!

ABOUT THE AUTHOR

...view details