தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு! - Vellore Central Jail Prisoner died

வேலூர்: மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த நபர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார்.

வேலூர் மத்திய சிறை

By

Published : Sep 14, 2021, 3:43 PM IST

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னகுட்டி (61). கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வேலூர் மத்தியச் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.

இருதய நோய் காரணமாக அடிக்கடி சின்னகுட்டிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி சின்னகுட்டிக்கு சிறையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சிறை மருத்துவர்கள் அறிவுரைப்படி அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சின்னகுட்டி இன்று (செப் 14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details