தமிழ்நாடு அரசு இ-பாஸ் பெறும் நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, விண்ணப்பித்த அனைவருக்கும் பாஸ் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தவர்கள் தற்போது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனா்.
இ-பாஸ் தளர்வு: தருமபுரி மாவட்ட எல்லையில் குவிந்த வாகனங்கள் - எல்லைப் பகுதி
தருமபுரி: இ-பாஸ் பெறுவதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் தருமபுரி மாவட்ட எல்லையில் வாகனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
தேசிய நெடுஞ்சாலை 44, தருமபுரி மாவட்டத்தின் வழியாக கடந்துச் செல்வதால் பெங்களூரு, கிருஷ்ணகிரி, ஓசூா், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சேலம், ஈரோடு, கரூா், நாமக்கல், கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் தொப்பூர் சோதனைச் சாவடியை கடந்து சென்றன. வெளியூர்களிலிருந்து அதிக நபா்கள் கார் மூலம் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காவல்துறையினர் மாவட்ட எல்லையில் இ-பாஸ் பரிசோதனை செய்தனா். மருத்துவத்துறையினா் தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகள், வாகன ஓட்டுநர்களை பரிசோதனை செய்த பிறகே அனுப்பி வைக்கின்றனர். இ-பாஸ் பெறாமல் கடக்கக் கூடிய வாகனங்களை அந்தந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.