தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை - உழவர் சந்தையில் விற்றுத் தீர்ந்த காய்கறிகள்! - Vegetable price hike in Dharmapuri

தருமபுரி: உழவர் சந்தையில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 37 டன் காய்கறிகள் விற்பனையாகியுள்ளன.

தருமபுரி சந்தை
தருமபுரி சந்தை

By

Published : Sep 19, 2020, 11:22 AM IST

தருமபுரி உழவர் சந்தைக்கு இன்று (செப்.19) 37 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்தன. இன்று, புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால், பொது மக்கள் ஏராளமானோர் வீட்டில் வழிபாடு நடத்த காய்கறிகள் வாங்க வந்திருந்தனர். இன்று வழக்கத்தைவிட விவசாயிகள் அதிக அளவு காய்கறிகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.

கடந்த வாரம் தக்காளியின் விலை கிலோ 32 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் இன்று விலை கிடுகிடுவெனக் குறைந்து 24 ரூபாய்க்கு விற்பனையானது. கத்திரிக்காய் நேற்றைய விலையைவிட எட்டு ரூபாய் உயர்ந்து கிலோ 28 ரூபாய்க்கு விற்பனையானது.

அதேபோல் மற்ற காய்கறிகளின் விலை (கிலோவுக்கு):

  • வெண்டைக்காய் - 30 ரூபாய்,
  • அவரைக்காய் - 34 ரூபாய்,
  • முருங்கைக்காய் - 60 ரூபாய்,
  • பச்சை மிளகாய் - 25 ரூபாய்,
  • கொத்தவரங்காய் - 32 ரூபாய்.

81 விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். தருமபுரி உழவர் சந்தையில் இன்று 37 டன் காய்கறிகள் 11 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details