தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி- கி.வீரமணி விமர்சனம் - admk

தருமபுரி: தேர்தலின்போது அனைவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக வாக்குறுதியளித்த மோடி, வெற்றிபெற்ற பின் அதை நிறைவேற்றவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி- கி.வீரமணி விமர்சனம்

By

Published : Apr 14, 2019, 9:27 AM IST

தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் மற்றும் அரூர், பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் ஆ.மணி, செ.கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து ஆருரில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி கடந்தத் தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக சொன்ன அவர் அதை செய்யவில்லை.

மேலும் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். ஆனால் ஐந்து ஆண்டுகளில் நான்கரை கோடி பேருக்கு வேலை பறிபோனதுதான் மிச்சம்" என குற்றம்சாட்டினார்.

கி.வீரமணி

ABOUT THE AUTHOR

...view details