தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகமரை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணுப்பையன். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் உயிரிழந்தார். இதையடுத்து, கண்ணுப்பையன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
முதியவர் உயிரிழந்த வழக்கு: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்! - தருமபுரியில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
தருமபுரி: நாகமரை பகுதியைச் சேர்ந்த முதியவர் கண்ணுப்பையன் உயிரிழந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Vck protest in dharmapuri
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏரியூர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, முதியவர் கண்ணுப்பையனை அடித்துக்கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.