தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிகாடு பகுதியில் ஏற்காடு மலை அடிவாரத்தில் வாணியாறு அணை உள்ளது. 65 அடி உயரம் கொண்ட வாணியாறு அணைக்கு, ஏற்காடு மலைப் பகுதியிலிருந்து வரும் மழை நீர் மூலம் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், அணை வறண்டு மேய்ச்சல் நிலமாக மாறியது.
தொடர் மழையால் நிரம்பிய வாணியாறு அணை... உபரி நீர் திறப்பு! - வாணியாறு அணை உபரி நீர் அதிகரிப்பு
தருமபுரி: தொடர் கனமழை காரணமாக வாணியாறு அணை நிரம்பியுள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, தருமபுரி, சேலம், ஏற்காடு மலைப்பகுதியில் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால் வாணியாறு அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. 65 அடி உயரம் கொண்ட வாணியாறு அணையில், 63 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளது.
மேலும், அணைக்கு வினாடிக்கு 22 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 22 கன அடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பத்து நாள்கள் முன்பே மாவட்ட நிர்வாகம் சார்பில் மோளையானூர், வெங்கடசமுத்திரம், பறையப்பட்டிபுதூர், தென்கரைக்கோட்டை உள்ளிட்ட கரையோர பகுதி மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.