தருமபுரி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா, "தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தை நகரப் பகுதியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைக்க தொடர்ந்து வணிகர்களும் பொது மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் மௌனமாக உள்ளது.
ஏற்கனவே பேருந்து நிலையம் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் கடையடைப்பு நடைபெற்றது. இதேபோன்று டிசம்பர் 17 ஆம் தேதி தருமபுரியில் பேருந்து நிலையம் இடமாற்றத்தை கண்டித்து ஒருநாள் கடையடைப்பு நடைபெறும். மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டமாக மாற்றப்படும்.