தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதயநிதி கைது: கண்டனம் தெரிவித்து திமுகவினர் சாலை மறியல்! - திமுக இளைஞரணி செயலாளர்

தர்மபுரி: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தர்மபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Udayanithi arrested: DMK roadblock
Udayanithi arrested: DMK roadblock

By

Published : Nov 22, 2020, 8:05 PM IST

நாகை மாவட்டம் குத்தாலத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 22) மூன்றாவது நாளாக தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டர். அப்போது அனுமதியின்றி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக கூறி உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் தொடர்ந்து மூன்றாவது நாளாக கைது செய்தனர்.

இதை கண்டிக்கும் வகையில் தர்மபுரி நாடளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட திமுகவினர், நான்கு ரோடு பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தின் போது மாநில அரசை எதிர்த்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர், அனுமதியின்றி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதையும் படிங்க:படைப்புழு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் மக்காச்சோளம்; ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வீண்!

ABOUT THE AUTHOR

...view details