தருமபுரி:அரூர் நான்கு ரோடு பகுதியில் மனைவி மற்றும் 8 மாத கைக் குழந்தையுடன் ஜான்ராஜ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அதே சாலையில் இருந்து பக்கவாட்டு சாலைக்கு மற்றொரு வாகன ஓட்டி திடீரென திரும்ப முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத ஜான்ராஜ் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதினார்.
இதில் ஏற்பட்ட விபத்தில் 8 மாத கைக்குழந்தை ஜான்ராஜின் மனைவி உள்ளிட்டோர் சாலையில் சறுக்கிய படி சில அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர். அருகில் இருந்தவர்கள் குழந்தை மற்றும் தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.