தமிழ்நாடு

tamil nadu

கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது!

By

Published : Sep 10, 2020, 3:10 PM IST

தருமபுரி: கடத்தூர் பகுதிகளில் ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து வியாபாரிகளிடம் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தூர் பகுதிகளில் ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து வியாபாரிகளிடம் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டதாக 2 பேர் கைது
கடத்தூர் பகுதிகளில் ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து வியாபாரிகளிடம் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டதாக 2 பேர் கைது

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தாளநத்தம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு இளைஞர்கள் சின்னதங்கம், மல்லிகா உள்ளிட்ட காய்கறி சிறு வியாபாரிகளிடம் இரவு நேரத்தில் வந்து அதிகப்படியான காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை வாங்கிவிட்டு பணம் கொடுத்துச் சென்றுள்ளனர்.

அந்த ரூபாய் நோட்டுகள் எண்ணும் போது கலர் ஜெராக்ஸ் செய்த கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து மீண்டும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே இளைஞர்கள் தாளநத்தம் பகுதியில் வந்து பொருள்களை வாங்கியுள்ளனர். அப்பொழுது அடையாளம் கண்ட பொதுமக்கள் அவர்களை துரத்தி பிடிக்க முயன்றபோது, வியாபாரிகளை கீழே தள்ளி விட்டு தப்பியுள்ளனர். இதனையடுத்து சிறு வியாபாரிகள் கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

தாளநத்தம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில் ஊத்தங்கரை அடுத்த தோரணம்பதியைச் சேர்ந்த ஆனந்தன் மற்றும் ராஜ்குமார் என்பது தெரியவந்தது. தனிப்படை காவல் துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஜெராக்ஸ் மிஷினை பறிமுதல் செய்தனர்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பட்டதாரி இளைஞரான ராஜ்குமார், தனது கிராமத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்ததும் வருவாய் இல்லாத காரணத்தால் தனது உறவினரான ஆனந்தனுடன் சேர்ந்து தொடர்ந்து இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கடத்தூர் காவல் துறையினர் இருவரையும் கைது செய்து கள்ள நோட்டு அடிக்க பயன்படுத்திய ஜெராக்ஸ் எந்திரம் மற்றும் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details