தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையில் லாரி மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு!

தருமபுரி: சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று (டிச. 08) அதிகாலை ஏற்பட்ட லாரி விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

accident
accident

By

Published : Dec 8, 2020, 8:00 AM IST

பெங்களூருவிலிருந்து ஆப்பிள் லோடு ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று, சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வெத்தலக்கார பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது பழுதாகி நின்றது. பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி பின்புறம் மோதியது.

இந்த விபத்தில் விருத்தாசலம் மாவட்டத்தைச் சேர்ந்த லாரியில் வந்த மாற்று ஓட்டுநர் பழனிவேல் (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரியில் இருந்த ஓமலூரைச் சேர்ந்த லோடுமேன் வெங்கடேஸ்வரன் (50) தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அதிகாலையில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: 'திமுக அழுகிப்போன தக்காளி; அந்தக் கட்சிக்கு சகுனம் சரியில்லை' - ராஜேந்திர பாலாஜி

ABOUT THE AUTHOR

...view details