தருமபுரிமாவட்டம் நார்த்தம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தம்மனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகசபாபதி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மூத்த மகள் சஞ்சனாஸ்ரீ (7), இளைய மகள் மோனிகாஸ்ரீ (5), மூன்றாவது 3 வயதில் மகன் உள்ளார். இவர்களது பெற்றோர் இருவரும் விவசாய பணிகளுக்காக சென்றிருந்தனர்.
அப்போது, வீட்டில் இருந்த மூன்று குழந்தைகளும், வீட்டிலிருந்து சிறிது தூரத்திலுள்ள தம்மனம்பட்டி ஏரிக்கு சைக்கிளில் சென்றுள்ளனர். தம்பியை கரைக்கு மேலே அமரவைத்துவிட்டு இரண்டு பெண் குழந்தைகளும் ஏரியில் மீன் பிடிப்பதற்காக இறங்கியுள்ளனர்.
சேறு நிறைந்த பகுதிக்குச் செல்லவே சேற்றில் சிக்கி இரண்டு பெண் குழந்தைகளும் நீரில் மூழ்கின. செய்வதறியாது திகைத்துப் போய் இருந்த 3 வயது சிறுவன் அழுதுகொண்டிருந்தான். இதற்கிடையே, வீட்டில் குழந்தைகள் இல்லாததைக் கண்ட பெற்றோர், அக்கம் பக்கத்தில் விசாரித்து ஏரி அருகே சென்றனர்.