கிருஷ்ணகிரி மாவட்டதைச் சேர்ந்த முருகன் (42) அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஷீலா, அவருடைய மைத்துனர் கோவிந்தராஜ், அதே ஊரைச் சேர்ந்த இன்னும் நான்கு பேரும் இணைந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற வைப்பதாகக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, கடகத்தூர், செல்லியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 30க்கும் மேற்பட்டோரிடம் இதே காரணத்தைக் கூறி ஒவ்வொருவரிடமும் 7 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் வீதம் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி உள்ளனர். ஆனால் அவர்கள் வேலையையும் வாங்கித் தராமல், கொடுத்த பணத்தையும் தராமல் ஆறுமாதங்களுக்கு மேலாக ஏமாற்றி வந்துள்ளனர்.