தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் பைக் திருட்டு: இருவர் கைது! - தருமபுரியில் பைக் திருட்டு

தருமபுரி: தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Two Arrested For Bike Theft In Dharmapuri  Bike Theft In Dharmapuri  Bike Theft  தருமபுரியில் பைக் திருட்டு  தருமபுரியில் பைக் திருட்டு இருவர் கைது
Bike Theft In Dharmapuri

By

Published : Jan 2, 2021, 1:07 PM IST

தருமபுரி மாவட்டம் அருகேயுள்ள நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை ஆகியப் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடுப் போகின. இது குறித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத் திருடர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில், இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன், ரித்திக் ரோஷன் ஆகிய இருவரை காவல் ஆய்வாளர் ரங்கசாமி தலைமையிலான காவலர்கள் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க:செல்போன் கடைப் பணியாளரின் இருசக்கர வாகனம் திருட்டு!

ABOUT THE AUTHOR

...view details