தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் தொடங்குகிறது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு 87 ஆயிரத்து 960 விடைத்தாள்கள்களும், அரூர் மையங்களுக்கு 45 ஆயிரத்து 883 விடைத்தாள்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கான பணியில் முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர், உதவி தேர்வாளர் என 1,306 ஆசிரியர்கள் மற்றும் பிறப் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில் தருமபுரி அதியமான் கோட்டை தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆட்சியர் மலர்விழி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
dharmapuri-collecter-inspection
இதையடுத்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு விடைத்தாள் திருத்தும் மையங்களில் கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கிருமிநாசினிகளைப் பயன்படுத்த வேண்டும். குடிநீர் வசதி செய்து கொடுத்தல், கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் உள்ளிட்டைவைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க:விடைத்தாள் திருத்தும் மையங்களில் காஞ்சிபுரம் ஆட்சியர் ஆய்வு