திருப்பூர்தாராபுரம் புதுநகர் பகுதியிலுள்ள கால்வாயில் கடந்த 7ஆம் தேதி கேட்பாரற்று சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். காவல் துறையினா் சூட்கேஸை சோதனை செய்ததில் பெண் சடலம் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஐந்து தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரனை செய்ததில் இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் பெண் சடலத்துடன் கூடிய சூட்கேஸை கொண்டு வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் அந்த பெண் குடியிருந்த வீட்டை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். உயிரிழந்த பெண் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரின் பெயர் நேகா என்பதும் தெரியவந்தது. அப்பெண் அபிஜித் என்ற நபரோடு கடந்த ஒரு மாதமாக திருப்பூர் வந்து வெள்ளியங்காடு கே.எம்.ஜி பகுதியில் வீடு எடுத்து குடியிருந்தது தெரியவந்துள்ளது.