தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை! - Anna university student commits suicide

திருச்சி: அண்ணா பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலை கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை!
அண்ணா பல்கலை கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை!

By

Published : Jan 9, 2020, 2:57 PM IST

தருமபுரியைச் சேர்ந்த ஜெயவேல் மகள் லோகேஸ்வரி (21) திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மாத்தூர் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு படித்துவந்தார்.

அதே பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கி பயின்றுவந்தார். மாணவி லோகேஸ்வரி அதே ஊரைச் சேர்ந்த மாணவரை காதலித்து வந்தார். இதற்கு இரு வீட்டாரும் சம்மதிக்க திருமணம் செய்துவைக்கவும் முடிவுசெய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தந்தை ஜெயவேலுக்கு அதிக கடன் இருந்ததால் லோகேஷ்வரி மனவேதனையில் இருந்துள்ளார். மேலும் கல்லூரியில் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க வருமாறு தனது காதலனிடம் லோகேஸ்வரி அழைத்துள்ளார்.

ஆனால் காதலன் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லோகேஸ்வரி நேற்று இரவு தனது டைரியில் எழுதி வைத்துவிட்டு தான் தங்கியிருந்த தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்தத் தகவலறிந்த திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் துறையினர் லோகேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சக மாணவ - மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க...உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முதலமைச்சரின் இரங்கலும் அறிவிப்பும்!

ABOUT THE AUTHOR

...view details