தருமபுரி:கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி-14ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரில் நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதல் புல்வாமா தாக்குதல் ஆகும். இது அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், சி.ஆர்.பி.எப் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து, பயங்கரவாதிகள் செய்த குண்டுவெடிப்பு தாக்குதல் ஆகும். அந்த தாக்குதலில் சுமார் 40 சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட ஒரு பயங்கரவாதியும் உயிரிழந்தார்.
இந்த தாக்குதலுக்கு ஜெய்சு-இ-முகமது என்ற பயங்கரவாதக் குழு பொறுப்பேற்றது. தற்போது அந்த கொடூரத் தாக்குதல் நடந்து, இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. பல இடங்களில் 4-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி கொண்டாடப்படுகிறது. நாட்டில் பல்வேறு இடத்தில் பிப்ரவரி 14ம் தேதியை கருப்பு தினமாக அறிவித்து அஞ்சலி செலுத்துகின்றனர்.