தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மே தினத்தைக் கொண்டாட ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - சுற்றுலாப் பயணிகள்

தர்மபுரியிலுள்ள ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் இன்று மே தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

By

Published : May 1, 2022, 3:54 PM IST

தர்மபுரி: ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் மே தின விடுமுறையைக் கொண்டாட காலையிலிருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். பயணிகள் வருகை அதிகரித்ததால் ஒகேனக்கல்லுக்கு 2 கிலோ மீட்டருக்கு முன்பே வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.

ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி மற்றும் காவிரி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாக குளித்து கொண்டாடினர். விடுமுறை தினம் என்பதால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், ஒகேனக்கலில் உள்ள தங்கும் விடுதிகளின் வாடகை 3 முதல் 5 மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோ மீன் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 700 ரூபாய் வரை விற்பனையாகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகள் அதிகரித்ததால் உணவுப்பொருள்களின் விலையை வியாபாரிகள் திடீரென உயர்த்தி விற்பனை செய்து வருவதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இதையும் படிங்க:மதுரை அஜித் ரசிகர்களின் அலப்பறைகள் - வைரலாகும் போஸ்டர்கள்

ABOUT THE AUTHOR

...view details