தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் குடியரசு தின விடுமுறையை கொண்டாட இன்று காலை முதலே வெளி மாவட்டம், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிய தொடங்கினர்.
விடுமுறை தினத்தை முன்னிடடு, இன்று அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலுக்கு வருகை தந்ததால், அப்பகுதி முழுவதும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.