தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறையைக் கொண்டாட வந்திருந்தனர். சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்தனர். அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்த பிறகே சுகாதார துறை அலுவலர்கள் அனுமதித்து வருகின்றனர்.
ஒகேனக்கலில் குவிந்த வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள்! - dharmapuri hogenakkal falls
தருமபுரி: ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும், வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
okaa
மேலும், அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு 7 ஆயிரம் கன அடியாக உள்ளதால், மெயின் அருவியில் மிதமான தண்ணீர் வருகிறது. வெளிமாநில சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தின் வழியாக சென்று ஒகேனக்கல் மெயின் அருவியின் அழகை ரசித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டு, எண்ணெய் மசாஜ் செய்துகொண்டும் உற்சாகமாக உள்ளனர்.