தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒகேனக்கலில் தடையை மீறி ஆயில் மசாஜ், போதைக் குளியல்: கண்டுகொள்ளுமா காவல் துறை? - hogenakkal falls

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் காவல் துறையின் தடையை மீறி ஆயில் மசாஜ் செய்து குளிப்பவர்களை தடுத்திடுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

hogenakkal falls
ஆயில் மசாஜ் குளியல்

By

Published : Jul 18, 2021, 5:38 PM IST

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் கரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, பென்னாகரம் ஒகேனக்கல் சாலையில் இரண்டு இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒகேனக்கலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை எனக் கூறி, காவல் துறையினர் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.

தடையை மீறி குளியல்

இந்நிலையில், காவல் துறையின் தடையை மீறி சுற்றுலாப் பயணிகள், ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும் வருகின்றனர். மது போதையில் ஆபத்தான முறையில் ஆற்றில் உள்ள வழுக்கும் தன்மை கொண்ட பாறைகளின் நடுவே அவர்கள் நடந்து செல்கின்றனர்.

ஒகேனக்கலில் தடையை மீறி ஆயில் மசாஜ் குளியல்

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஆனால், தடையை மீறி உள்ளே நுழைந்து இவ்வாறு குளிப்பவர்களை காவல் துறையினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே, அத்துமீறி இவ்வாறு சிலர் குளிப்பதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:வன்னியர் தனி இடஒதுக்கீடு: எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்துப் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details