தர்மபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல கட்டுப்பாடுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் நாளை (ஏப்.20) முதல் சுற்றுலா பயணிகள் வருகை புரியவும், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவதற்கும் தடை விதித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒகேனக்கல்லில் குளிக்க, பரிசல் இயக்க தடை - ஒகேனக்கல் சுற்றுலா தளம்
தர்மபுரி: ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் குளிக்க, பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிக்க, பரிசல் இயக்க தடை
மேலும், கரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், அடிக்கடி கைகளை கழுவியும், தேவையற்று வீட்டிலிருந்து வெளியே செல்வதை தவிர்த்து தர்மபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:நாளை திரையரங்கு உரிமையாளர்கள் ஆலோசனை!