தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தருமபுரி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிபட்டி, அரூர் தொகுதிகளில் பணியாற்றவிருக்கும் மண்டல அளவிலான மேற்பார்வையாளர்களுக்கானப் பயிற்சிக் கூட்டம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. இந்தப் பயிற்சிக் கூட்டத்தில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பார்வையாளர் தேவேந்திர குமார் ஜனா, காவல் பார்வையாளர் யுகேந்திர சிங், மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பார்வையாளர் சஞ்சீவ் குமார் பெஸ்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேர்தலில் பணியாற்றும் மண்டல மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி கூட்டம்! - பாப்பிரெட்டிபட்டி
தருமபுரி : தருமபுரி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிபட்டி, அரூர் தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் பணியாற்றும் மண்டல மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.
dharmapuri
அக்கூட்டத்தில், வாக்குசாவடிகளில் பணியாற்றும் மண்டல மேற்பார்வையாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், தேர்தல் நடக்கும் நாளன்று வாக்குசாவடிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், இப்பயிற்சியில் காவல்துறை, வருவாய்துறை மற்றும் மண்டல மேற்பார்வையாளர்கள் என 150-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.