கடந்த 23-ம் தேதி உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மகன் சந்திரமோகனுக்கும், சென்னை சிவசங்கரன் பத்மா தம்பதியரின் மகள் வைஷ்ணவிக்கும் திருமணம் நடந்தது. இதனையடுத்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று தருமபுரி மாவட்டம் கரியமங்கலத்தில் நடைபெற்றது.
அமைச்சர் அன்பழகன் இல்ல திருமண விழா: மணமக்களை வாழ்த்திய ஓபிஎஸ், இபிஎஸ் - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்
தருமபுரி: உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் மகன் திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
EPS
இவ்விழாவில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து தருமபுரி தொப்பூர் வழியாக வரும்போது தருமபுரி மாவட்ட எல்லையில் முதலமைச்சருக்கு அதிமுகவினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.