தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் ஏரியில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தப் பணிகளை தலைமைச்செயலாளர் க.சண்முகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் விவசாயிகளிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசு சிறப்பான முறையில் குடிமராமத்துத் திட்டப் பணிகளை செய்து வருகிறது என்றும் இதன்மூலம் தற்போது ஏரியில் தேங்கியுள்ள தண்ணீரை விவசாயப் பணிகளுக்கும், குடிநீர் ஆதாரத்தை பெருக்கவும் பயன்படுத்த வேண்டும் என்றும் பேசினார்.
மேலும் ஏரியின் கரைகளில் பல்வேறு மரக்கன்றுகளை நட்டு அதை பலப்படுத்த வேண்டும் என்றும்; ஆயக்கட்டு பாசனதாரர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.