தருமபுரி மாவட்டம் அரூர் வேப்பம்பட்டி அருகிலுள்ள மல்லூத்துப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜி (45), திருப்பதி (28), சின்ன பையன் (42) ஆகிய மூவரும் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். இன்று மாலை திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது.
தருமபுரியில் இடி தாக்கி ஒருவர் பலி; இருவர் படுகாயம்! - Thunder Attacking In Harur
தருமபுரி: அரூர் அருகே இடி தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
![தருமபுரியில் இடி தாக்கி ஒருவர் பலி; இருவர் படுகாயம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4710982-1094-4710982-1570713899103.jpg)
One Person Dead To Thunder Attack
அப்போது, இவர்கள் மூவரும் வெளாம்பட்டி பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தடியில் ஒதுங்கி நின்றபோது இடி தாக்கியது. இதில் ராஜி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த திருப்பதி, சின்ன பையன் ஆகிய இருவரும் அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.