தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி இலங்கை அகதிகள் முகாமில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் கட்டட வேலை உள்ளிட்ட தினக்கூலி வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். அண்மையில் இலங்கைத் தமிழர் முகாமிலுள்ள 20க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
அதில் 2 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அப்பகுதிகளில் தொற்று பரவாமல் இருக்க காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சுகாதாரத் துறையினர் கிருமி நாசினி தெளித்து முகாமைச் சுற்றிலும் தடுப்புகள் அமைத்து சீல் வைத்தனர்.