தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல்துறையினர் மாவட்ட எல்லையில் சோதனை சாவடி அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து மூன்று இளைஞர்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசராணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி அடுத்த சிங்கனூர் பகுதியைச் சேர்ந்த வாசிம்(20), சபியுல்லா (19), வாஷிம்(19) என தெரியவந்தது.
இருசக்கர வாகனங்களைத் திருடிய மூன்று இளைஞர்கள் கைது! - காரிமங்கலம் காவல்துறை
தர்மபுரி: இரு சக்கர வாகனங்களைத் திருடிய மூன்று பேரை காரிமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் வந்த வாகனம் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரகுநாதன் என்பவருக்குச் சொந்தமானது என்றும், அவரது வீட்டில் வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை மூன்று பேரும் திருடிக்கொண்டு, கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் போது காவல்துறையினரிடம் மாட்டி கொண்டதாகத் தெரியவந்தது.
இதையடுத்து அந்த இளைஞர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததோடு, வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.