தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்நாடகாவிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த மூவர் கைது - தர்மபுரி செய்திகள்

தர்மபுரி: கர்நாடகாவிலிருந்து 400 மதுபாட்டில்கள் கடத்தி வந்த மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

மதுபாட்டில்கள் கடத்தி வந்த மூவர்
மதுபாட்டில்கள் கடத்தி வந்த மூவர்

By

Published : May 27, 2021, 11:05 PM IST

தமிழ்நாட்டில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சிலர் கர்நாடகா மாநிலத்திலிருந்து மதுபானங்களை வாங்கி வந்து, கிராமப் பகுதிகளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு வந்தது.

இதனையடுத்து தர்மபுரி மாவட்டம், குண்டல்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கலால் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் கர்நாடகாவிலிருந்து - சேலம், எடப்பாடி பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து மதுபாட்டில்களை கடத்திய சக்திகுமார் என்பவரைக் கைது செய்தனர்.

அதேபோல், கர்நாடகாவிலிருந்து தர்மபுரிக்கு காரில் மதுபாட்டில்களை கடத்திச் சென்ற சரத் குமார், மதன் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 400 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details