தருமபுரி அடுத்த அதகபாடியில் துணை மின் நிலையம் உள்ளது. கடந்த 7ஆம் தேதி இரவு அங்கு மின் ஊழியர் முனியப்பன் பணியில் இருந்தார். அப்போது மினி வேனில் ஐந்து பேர் கொண்ட கும்பல் திடீரென வந்து இறங்கியது. அவர்கள் பணியில் இருந்த முனியப்பனை தாக்கிவிட்டு மின்நிலையத்தில் இருந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 அலுமினிய மின் கம்பிகளை மினி வேனில் கடத்தி சென்றனர்.
திருட்டு சம்பவம் குறித்து முனியப்பன் இளநிலை பொறியாளர் முரளி, காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி வழியாக வந்த மினி வேனை மறித்து சோதனை செய்தனர்.