தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு - tamilnadu news

கர்நாடக காவிரிக் கரையோரப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

து 19 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
து 19 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

By

Published : Oct 11, 2021, 8:02 PM IST

தர்மபுரி:பென்னாகரம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த இரு தினங்களாக அதிகரித்து வருகிறது. நேற்று(அக்.10) நீர்வரத்து 13 ஆயிரம் கன அடியாக இருந்தது.

இன்று(அக்.11) 6 ஆயிரம் கனஅடி நீர் உயர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக உள்ளது. இரு தினங்களாக காவிரி கரையோர பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

19 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

ஆறுகளில் வழிந்தோடும் நீர், மழைநீர் என்பதால் நீர் கலங்கலாக (சென்நிறமாக) காட்சியளிக்கிறது.

ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று காவிரியற்றின் அழகை மட்டும் ரசித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆயுத பூஜை - சென்னையில் போக்குவரத்து மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details