தருமபுரி:தருமபுரி மாவட்டம் சித்தேரி பகுதியைச் சுற்றி 62 மலைக் கிராமங்கள் உள்ளன. வருடம் 2022ஐ கடந்து விட்டாலும் 1800 காலக்கட்டங்களில் தான் இன்னும் அப்பகுதி மலைக்கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குடிநீர், தெருவிளக்கு, மருத்துவம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த 62 கிராம மக்களுக்கு செல்போன் டவர் வசதியை தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் முயற்சியால் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது இதுகுறித்து அக்கிராம மக்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மலை கிராமங்களை சேர்ந்த ஒருவர் ”சித்தேரி ஊராட்சியில் 62 கிராமங்கள் கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரத்து 600 அடி உயரத்தில் உள்ளது. இங்கு செல்போன் டவர் பிரச்சனை அதிகமாக இருப்பதால் தொழில் எதுவும் இல்லை . சாலை வசதி பிரச்சினையாக உள்ளது. சாலை வசதி ஒரு சில கிராமங்களுக்கு மட்டும் உள்ளது மற்ற கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எங்கள் பிரச்சனையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.