தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு கடலூர் மாவட்டத்திலுள்ள வசிஷ்டபுரத்தைச் சேர்ந்த சிவராமன் (29) என்பவர் தன்னுடன் பணிபுரியும் நண்பர்களுடன் நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்துள்ளார்.
ஒகேனக்கல்லில் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்த இவர்கள், ஊட்டமலை அருகே உள்ள காவிரி ஆற்றில் குளித்த போது எதிர்பாராதவிதமாக சிவராமன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். உடனடியாக அவரது நண்பர்கள் ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் சிவராமன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, தீயணைப்பு துறையினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிவராமனை தேடும் பணியில் பரிசல் ஓட்டிகள் உதவியுடன் தீவிரமாக தேடிவந்தனர். இரவாகியும் இளைஞரின் உடல் கிடைக்காததால், தேடும் பணியில் இரண்டாவது நாளாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை இளைஞர் உடல் கிடைக்காததால், நாளையும் தேடும் பணி தொடரும் என்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பியடித்து சிக்கிய மாணவர்கள்