தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் ஜோடி பாலக்கோடு காவல் நிலையத்தில் தஞ்சம்! - தர்மபுரி மாவட்ட செய்திகள்

தருமபுரி பாலக்கோடு காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் ஜோடி பாலக்கோடு காவல் நிலையத்தில் தஞ்சம்!
காதல் ஜோடி பாலக்கோடு காவல் நிலையத்தில் தஞ்சம்!

By

Published : Dec 28, 2022, 10:59 PM IST

தருமபுரி:பாலக்கோடு அடுத்த எர்ணஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் அவரது மகன் ராஜ்குமார் (24) பொறியியல் படித்துவிட்டு ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது ஊருக்கு அருகில் உள்ள ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் மகள் பிரியதர்ஷினி (22) பாலக்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் கல்லூரியில் எம்.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

ராஜ்குமார் பிரியதர்ஷினியை கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 26 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே கதிர் புரத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் பாலக்கோடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பாலக்கோடு காவல் நிலையம் காவல் ஆய்வாளர் தவமணி இருதரப்பு பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பெண்ணின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் பிரியதர்ஷினி காதலனுடன் தான் செல்வேன் எனத் தெரிவித்ததால் போலீசார் காதலனுடன் அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் தஞ்சையில் முதன்முறையாக திருநங்கைக்கு சந்தையில் கடை ஒதுக்கீடு!

ABOUT THE AUTHOR

...view details