தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, தொப்பூர், கடத்தூர், மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மல்லிகைப்பூ, கனகாம்பரம், சம்பங்கி, சாமந்திப் பூக்களை பயிரிட்டு சாகுபடி செய்துவருகின்றனர்.
விவசாயிகள் சாகுபடி செய்த பூக்களை தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் பூக்கள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவந்து விற்பது வழக்கம். தற்போது பண்டிகை காலம் இல்லாத காரணத்தால் பூக்களின் விலை கடுமையாகச் சரிந்துள்ளது.
சென்ற வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் பூக்களின் விலை 80 சதவீதம் குறைந்துள்ளது.சென்ற வாரம் 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட சாமந்திப்பூ 20 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இன்று ரோஜா பூ கிலோ ரூ.30, கனகாம்பரம் கிலோ ரூ.200, மல்லிகைப் பூ கிலோ ரூ.20, செண்டுமல்லி கிலோ ரூ.10, பட்டன் ரோஸ் கிலோ ரூ.20, 20 ரோஸ் கொண்ட ஒரு கட்டு 40 ரூபாய்க்கும் விலை குறைந்து விற்பனையானது.
பூக்களின் விலை சரிவால் பூக்கள் பயிரிட்ட விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர்.