தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வனப்பகுதியில் வீசி எறியப்பட்ட பச்சிளம் குழந்தை சிசு - போலீசார் விசாரணை - வனப்பகுதி

தருமபுரி : ஏரியூர் அருகே உள்ள வனப்பகுதியில் பிறந்து இரண்டு நாட்களே ஆன பச்சிளம் குழந்தை வீசி எறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை சிசு

By

Published : Mar 25, 2019, 11:06 PM IST

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் சிகரல அள்ளி காட்டுப்பகுதியில் குழந்தையின் சடலம் ஒன்றை நாய்கள் இழுத்து திரிந்ததை ஆடு மாடு மேய்ப்பவர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் குமாரிடம் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த குமார் என்பவர் இந்த சம்பவம் குறித்துஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபு மற்றும் காவலர்கள் சிசுவின் உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும், நாய்கள் கடித்து குதறியதால் இறந்தது ஆண் சிசு வா பெண் சிசுவா என கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிசு இறந்த பின்பு வனப்பகுதியில் வீசப்பட்டதா அல்லது உயிருடன் வீசப்பட்டு நாய்கள் கடித்து குதறியதில் பச்சிளம் குழந்தை இறந்ததா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

பச்சிளங்குழந்தை காட்டுப்பகுதியில் வீசியது ஏரியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details