தருமபுரி:தருமபுரி மாவட்டம், பாலக்கோடு புறவழிச்சாலை அருகே நேற்று(பிப்.22) கிருஷ்ணகிரி, ஓசூா் பகுதி மக்களுக்கு செல்லும் பிரதான ஒகேனக்கல் குடிநீர் குழாயில் அழுத்தம் காரணமாக வால்வு திடீரென உடைந்தது.
குழாய் உடைப்பால் தண்ணீர் சுமார் 200 அடி உயரத்தில் பீய்ச்சி அடித்து வெளியேறியது. உடனடியாக பொதுமக்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்களுக்குத் தகவல் அளித்தனர்.