இதுதொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "புதுச்சேரியில் தற்போது ஆயிரத்து 796 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு மருத்துவமனைகளில் 300க்கும் மேற்பட்ட படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாநிலத்திலுள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி நிர்வாகம் படுக்கைகள் வழங்க மறுத்ததால், பேரிடர் மீட்பு துறை சார்பாக கரோனா சிகிச்சைக்காக அம்மருத்துவமனை எடுத்துக் கொள்ளப்பட்டது. கரோனா காலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.