தர்மபுரி:பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து இருந்தது. இன்று காலை நிலவரப்படி 10 ஆயிரம் கன அடி தண்ணீர் குறைந்து, ஒரு லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக உள்ளது. தொடக்கத்தில் நீர்வரத்து தொடர்ந்து நான்கு நாட்களாக, ஒரு லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்த நிலையில் தற்பொழுது குறைந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு: ஒரு லட்சத்து முப்பத்து ஐந்தாயிரம் கன அடியாக சரிந்தது!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்றைய நிலவரப்படி 10ஆயிரம் கன அடி தண்ணீர் குறைந்து ஒரு லட்சத்து 35ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து முப்பத்தி ஐந்தாயிரம் கன அடியாக சரிந்தது!
காவிரி கரையோரப்பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததாலும் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் நீர்வரத்து குறைந்துள்ளது. நீர்வரத்தால் ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால், சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் பகுதியில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் 32ஆவது நாளாக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஒரத்துபாளையம் அணையின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!