தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட ஐந்து பேர் மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றுடன் சிகிச்சை முடிந்து அனைவரும் வீடு திரும்பினா். இதையடுத்து தருமபுரி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கரோனா வைரஸ் தொற்றால் இம்மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று சிகிச்சை முடிந்து நல்ல முறையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், தற்போது தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் யாரும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், வெளி மாநிலங்களிலிருந்து, தருமபுரி மாவட்டத்திற்கு 2,750 நபர்கள் வருகை தந்துள்ளனர். அப்படி வந்தவர்கள் அனைவரும், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கரோனா இல்லாத மாவட்டமானது தருமபுரி- மாவட்ட ஆட்சியர் அப்பரிசோதனை முடிவில் ஒருவருக்குக்கூட கரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்பு, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து அவர்களது இல்லங்களிலேயே 14 நாள்களுக்கு அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம் என்றார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டுக்கு ரயில் சேவை இல்லை - புலம்பெயர்ந்தோர் ஏமாற்றம்