தருமபுரியில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2020 -2021 மீன்வளத் துறையின் மூலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு சொந்தமான குளங்கள், ஏரிகளில் மீன் குஞ்சுகளை இருப்புச் செய்து உள்நாட்டு மீன் வளத்தை பெருக்கும் நோக்கில் தருமபுரி மாவட்டத்தில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு ஹெக்டேருக்கு 5 ஆயிரம் நன்கு வளர்ந்த மீன் குஞ்சுகள் விட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தருமபுரி ஊராட்சி ஒன்றியம் பிடமனேரி ஏரியில் ஒரு ஹெக்டேருக்கு 5 ஆயிரம் குஞ்சுகள் வீதம் 35 ஆயிரம் மீன் குஞ்சுகளை இன்று (நவ.23) மாவட்ட ஆட்சியர் எஸ்.பி கார்த்திகா விடுவித்தார்.