அமமுக துணை பொதுச்செயலாளர் பழனியப்பன் மகள் திருமணம் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் நடைபெற்றது. இதை அமமுக
பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையேற்று நடத்திவைத்தார்.
மக்களவைத் தேர்தல் தோல்வி தற்காலிகமானது - டிடிவி தினகரன் - bdefeat of the parliamentary
தருமபுரி: மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி தற்காலிகமானது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அப்போது பேசிய அவர், ஒரு இயக்கம் தொடங்கப்பட்டு அது பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைய நீண்ட காலம் தேவைப்படும். இயக்கம் தொடங்கிய உடனே சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் வேண்டும் என சிலர் நினைத்து இங்கு வந்தார்கள். ஆனால், அவர்கள் ஆசை நிறைவேறாததால் தற்போது வேறு கட்சிக்கு சென்றுவிட்டதாக, செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரை மறைமுகமாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி தற்காலிகமானது, அது நிரந்தரம் கிடையாது என்றார். மேலும், தமிழ்நாட்டில் எப்போது தேர்தல் வந்தாலும் அமமுக வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.