தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சாலைகுள்ளாத்திரம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி மணிமேகலை. இவர்களது மகன் மோனிஷ் ராகுல் (8) இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
ரிமோட் கார் வாங்க சேர்த்து வைத்த பணம்: முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவன் - சேமிப்பு பணத்தை முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவன்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, ரிமோட் கார் வாங்க உண்டியலில் சேமித்து வைத்த 3,500 ரூபாயை முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவனுக் பாராட்டுக்கள் குவிகின்றன.

cm Relief fund
இந்த சிறுவன் ரிமோட் கார் வாங்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றுவதற்காக தனது பெற்றோர் கொடுக்கும் பணத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக உண்டியலில் சேமித்து வந்துள்ளார்.
முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவன்
இந்நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு சேமித்த பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க விரும்பியுள்ளார். இதனையடுத்து மோனிஷ் ராகுல் தனது பெற்றோருடன் பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் பாலமுருகனிடம், உண்டியலில் சேர்த்து வைத்துள்ள ரூ. 3,500யை வழங்கினார். சிறுவனின் செயலை வட்டாட்சியர் வெகுவாக பாராட்டினார்.