கடந்த அக்டோபர் மாதம் தருமபுரியைச் சேர்ந்த பத்மா என்பவர் கேரளாவில் காணாமல் போனதாக பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறையினரிடம் பத்மாவின் மகன் கொடுத்த புகாரின் பேரில் கேரளா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதே போல் கொச்சி காலடி பகுதியைச் சேர்ந்த ரோஸ்லி என்ற 50 வயது பெண்ணும் காணாமல் போனதாக சில மாதங்களுக்கு முன்பு புகார் வந்தது. இந்த இரண்டு புகார்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இருவரின் செல்போன் சிக்னல்களும் கேரள மாநிலம் பத்தனம்திட்டா அடுத்த இலந்தூர் பகுதியைச் சேர்ந்த பகவல்சிங் லைலா ஆகிய தம்பதி வீட்டில் கடைசியாக இருந்தது தெரியவந்தது.
பின்பு இருவரையும் விசாரணை செய்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் பகவல்சிங்கிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த மந்திரவாதியான ஷாபி ஆகிய இருவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது. குறுகிய காலத்திலேயே நெருக்கமான ஷாபி பகவல்சிங்கின் வீட்டில் ஒரு பெண்ணை நரபலி கொடுத்தால் செல்வம் பெருகும் உடல் வலிமை பெற்று ஆயுள் கூடும் என அவரிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு பகவல்சிங் தம்பதியினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அப்போதுதான் பத்மாவிடம் அணுகிய ஷாஃபி பண ஆசை காட்டி பகவல்சிங்கின் வீட்டிற்கு அழைத்துச் சென்று கட்டிலின் மீது படுக்க வைத்து கை,கால்களை கட்டிப்போட்டு கொடூரமாக கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்து ரத்தத்தை அரை முழுவதும் தெளித்து விடிய விடிய பூஜை நடத்தியுள்ளார்.