தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், மாரண்டஹள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது.
அதிலும் குறிப்பாக பாலக்கோடு பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகளில் இருந்த ஐஸ் கட்டிகளை பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை எடுத்து விளையாடினார்கள்.
மற்றொரு புறம் மாம்பழம் சீசன் தொடங்கியதால், ஆலங்கட்டி மழை மாங்காய்கள் மீது விழும் பொழுது காய்கள் அழுகி வீணாகிவிடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
ஆலங்கட்டி மழையால் மாங்காய் விவசாயிகள் வேதனை ஏற்கனவே வறட்சியின் காரணமாக தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி மரங்களை காப்பாற்றிய தங்களுக்கு அறுவடையின்போது பெய்த ஆலங்கட்டி மழை பெருத்த நஷ்டத்தை தந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.