தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா - thai poosa festival devotees perform special rituals by taking the kavadi

தருமபுரி: குமாரசுவாமி பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா
சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா

By

Published : Feb 8, 2020, 4:36 PM IST

Updated : Feb 8, 2020, 4:43 PM IST

தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தருமபுரி குமாரசுவாமி பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பால் குட ஊர்வலம் நடைபெற்றது.

சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவில் பக்தா்கள் அலகு குத்தி காவடி எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்

பக்தர்கள் சாலை விநாயகா் கோயிலிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டா் தொலைவில் உள்ள குமாரசுவாமி பேட்டை முருகன் கோயில்வரை மேள தாளம் முழங்க காவடி எடுத்தும், அலகு குத்தியும் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் பால் குட ஊர்வலம் நடைபெற்றது.

சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா

ஊர்வலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அலகு குத்தி ஊர்வலமாகச் சென்றனா். ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பால்குடம் எடுத்தனர். மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் ஆலயங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையும் படிங்க: மழைக்காக வனத்தில் குடியேறிய பொதுமக்கள் - விநோத பூஜை!

Last Updated : Feb 8, 2020, 4:43 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details