தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டத்திற்குட்பட்ட அடிலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதியம்மன் கோயில் இருக்கிறது. இத்திருக்கோயில் ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
தருமபுரியில் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு! - temple hundi broke and theft
தருமபுரி: காரிமங்கலம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு (மே 8) அடையாளம் தெரியாத நபர்கள், கோயிலிற்குள் புகுந்து உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும், அம்மன் கழுத்திலிருந்த 2 பவுன் தங்க தாளி சரடு ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
கோயில் திறந்திருப்பதை இன்று காலையில் கண்ட ஊர்மக்கள் உடனடியாக காரிமங்கலம் காவல்துறைக்கு தகவல் தெரிவத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.